எரகம, ரம்புக்கனை பிரதேசங்களில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

0
79

எரகம, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் இரு சடலங்கள் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

எரகம பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலமானது 45 முதல் 50 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இவர் ஊதா நிற மேற்சட்டையும் செம்மஞ்சல் நிற வேட்டியும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனை பிரதேசத்தில் திஸ்மல்பொல புகையிரத பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சடலமானது 35 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 அடி உயரமுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கறுப்பு நிற சட்டையும் பச்சை நிற காற்சட்டையும் அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம , ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.