எரிபொருளின் தரத்தில் எவ்வித சிக்கலும் இல்லையென பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது ஆய்வக பரிசோதனையின் பின்னரே விநியோகிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இதனை தெரிவித்தார்.