எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

0
180

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிபெட்கோ மற்றும் ICTA இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.
எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக Fuel.gov.lk என்ற இந்த புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இருப்பிடம் மற்றும் தேவையான எரிபொருளின் அளவு பற்றிய தகவலை உங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் தரவு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தால் புதுப்பிக்கப்படுகிறது.