எரிபொருள் வரிசையில் நிற்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு எவ்வாறு சமூகமளிப்பார்- ஜோசப் ஸ்டாலின்

0
141

பாடசாலைகளை திறந்து கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எமக்கும் விருப்பம் எனினும் எரிபொருள் வரிசையில் நிற்கும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலைக்கு சமூகமளிப்பர் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்மானத்தையும் மீறி இன்றைய தினம் சில பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அரசாங்கமானது இரண்டுவார காலத்துக்கு அனைத்து அரச நிறுவனங்களையும் இரண்டுவார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அரசாங்கத்தின் இயலாமையே வெளிப்படுகின்றது. அரசாங்கத்துக்கு நாட்டை கொண்டு நடத்தும் இயலுமை இல்லை என்பது இதனூடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

எனவே அரசாங்கமானது அரச திணைக்களங்களை மூடிவிட்டு நாட்டை கொண்டு செல்வதற்கு முயற்சிக்கன்றது. அவ்வாறாயின் அரசாங்கம் ஒன்று எதற்காக இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.