எரிபொருள் விநியோகம் இன்று முதல் சீராகும்!

0
177

நாட்டில் இன்று முதல் வழமைபோன்று எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலும், 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் டீசலும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் தாங்கிய
கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
மத்திய வங்கி அதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.