எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பு

0
179

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ஒக்ரைன் 92 ரக பெற்றோல் 60 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 340 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரைன் 95 ரக பெற்றோல் 135 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 375 ரூபாயாகும்.

ஓட்டோ டீசல் 80 ரூபாய் குறைந்து 325 ரூபாயாகவும் சுப்பர் டீசல் 45 ரூபாய் குறைந்து 465 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைந்து 295 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் புதிய விலைகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.