எஸ்தோனியா நாட்டின் பிரதமரை தேடப்படும் நபர் என அறிவித்த ரஸ்யா!

0
86

உக்ரைனின் தீவிர ஆதரவாளரான எஸ்தோனியா நாட்டின் பிரதமர் காஜா காலசினை ரஸ்யா தேடப்படும் நபர் என அறிவித்துள்ளது.
குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஸ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.
எஸ்தோனியாவின் கலாச்சார அமைச்சர் உட்பட வேறுசில முக்கிய அதிகாரிகளையும் ரஸ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
சோவித் யூனியனின் போர் வீரர்களின் நினைவுச்சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஸ்யா சுமத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
நான் சரியான விடயங்களை செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது.
இது ரஸ்யாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது.
ஆனால் அது நடைபெறாது.
மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவை மேலும் வலுப்படுத்தும் என எஸ்தோனியா நாட்டின் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.