ஏமன் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் பலி

0
7

ஏமனின் ஹொடைடா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றிரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஹவுதி சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அனீஸ் அலஸ்பாஹி தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனீஸ் அலஸ்பாஹி கூறினார். கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.