ஏறாவூரில் அடையாள அட்டை சோதனை

0
404

கொரோனா தொற்று அச்சத்தினையடுத்து வீதிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று காலை முதல் அடையாள அட்டை பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைவாக ஏறாவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்களை எழுமாறாக மறித்து தேசிய அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டதுடன் சட்டவிதிமுறைகளை அறியாதவர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இன்று 17 ஆந்திகதி தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கம் ஒற்றையாகக் கொண்டவர்கள் மாத்திரமே பயணம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.