ஏலக்காயின் விலை ரூ. 14,000 ஆக உயர்வு!

0
125

தற்போது சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 12 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படும். சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் வருடாந்தம் சுமார் 30 மெற்றிக் தொன் ஏலக்காய் நுகரப்படுகிறது. இந்நிலையில், உற்பத்தி குறைந்துள்ளதால், ஏலக்காய் உற்பத்திக்கு அதிக கேள்வியும் தேவையும் ஏற்பட்டுள்ளதாக ஏலக்காயை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தெரிவித்தனர்.