ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

0
95

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலநறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலநறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.