அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணும் வடகொரியா, தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
சமீபத்தில் அணுவாயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் “ஹ்வாசோங்-18” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தூண்டப்பட்டால் எதிரிகள் மீது அணுவாயுத தாக்குதலை நடத்த தயங்கமாட்டோம் என்பதுதான் எங்களது கொள்கை என கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், ஹ்வாசோங்-18 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதால், அதில் ஈடுபட்டவர்களை பாராட்டியுள்ளார்.
வடகொரியா கடந்த ஆண்டு அணு ஆயுதம் பயன்படுத்தும் வகையிலான சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.