ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவுப் பயணம் எதிர்வரும் 30ம் திகதி!

0
108

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவுப் பயணம் எதிர்வரும் 30ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலவுப் பயணத்திற்கான பணியை முகமது பின் ரஷித் பின் விண்வெளி நிலையம் மேற்கொண்டு வருகின்றது. குறித்த விண்வெளிப் பயணம் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஐஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தின் அடிப்படையில் குறித்த விண்கலம் புளோரிடாவின் கேப் கெனவரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.