ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா நகர அலுவலகம் இன்று திறப்பு!

0
83

ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா நகர அலுவலகம், இன்று, பண்டாரிக்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை, வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, நகர் வழியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால், மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன பேரணியாக, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, புதிய காரியாலயம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஹசூன் சுமதிபாலா, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இவருக்கான அங்கத்துவக் கடிதத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கட்சியின் வன்னித் தொகுதி அமைப்பாளர் மயூரதன், மன்னார் மாவட்ட அமைப்பாளர், பண்டாரிக்குளம் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.