ஐக்கிய தேசிய கட்சியானது நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்த கட்சியாகும் -அகில விராஜ்காரியவசம்

0
128

ஐக்கிய தேசிய கட்சி 76 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அபிவிருத்தியடைவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தனது தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது என்று முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 06ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படவுள்ளது.

சுகததாச விளையாட்டு அரங்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

உண்மையில் இந்நிகழ்வானது மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.

ஐக்கிய தேசிய கட்சியானது நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்த கட்சியாகும்.

நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் வீழ்ச்சியை சந்தித்த போது ஐக்கிய தேசிய கட்சி அரச தலைமைத்துவத்தை ஏற்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னின்று செயற்பட்ட கட்சியாகும்.

நாடு சுதந்திரமடைவதற்கு மிக முக்கியமான காரணமாக ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்த செயற்பாடுகளே பிரதான பங்கு வகிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கங்களானது விவசாயத்துறைக்கு என பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருந்தது.

அதேபோன்று கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அபிவிருத்தியடைவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு எமது கட்சிக்கு தலைமைத்துவம் கிடைக்கவில்லை. எனினும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை, வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.