ஐசிசியின் ஒக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் அறிவிப்பு!

0
50
FILE PHOTO: The International Cricket Council (ICC) logo at the ICC headquarters in Dubai, October 31, 2010. REUTERS/Nikhil Monteiro/File photo

2024 ஒக்டோபர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி (NOMAN ALI ) வென்றுள்ளார். கடந்த ஒக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானுக்கு உதவுவதில் நோமன் அலி முக்கிய பங்கு வகித்தார்.

இடது கை பந்து வீச்சாளரான இவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் ஆகியோருடனான பலத்த போட்டிக்கு மத்தியில் நோமன் அலி இந்த விருதினை வென்றுள்ளார்.கடந்த ஆண்டு ஓகஸ்டில் பாபார் அசாம் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.