டெஸ்ட துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.
859 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3 ஆவது இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4ஆவது இடத்திலும் அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
3ஆவது இடத்திலிருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9 ஆவது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ரோகித் சர்மா 6 ஆவது இடத்திலும் ஜெய்ஸ்வால் 7 ஆவது இடத்திலும் விராட்கோலி 8 ஆவது இடத்திலும்
முன்னேறியுள்ளனர்.
இலங்கை அணியின் வீரர் திமுத் கருணாரத்ன 14 ஆவது இடத்திலும் தனஞ்சய டி சில்வா 16 ஆவது இடத்திலும் உள்ளனர்
இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள்ளார்