ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ;யாவிலிருந்து பால்டிக் கடலுக்கடியில் குழாய்கள் மூலம் எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 26ம் திகதி நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயுக் குழாய்களில் கசிவு ஏற்பட்டது. பால்டிக் கடலில் டென்மார்க்-ஸ்வீடன் கடற்பரப்பில் அடுத்தடுத்து எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து எரிவாயுக் குழாய்க் கசிவில் ரஷியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடலுக்கடியில் செல்லும் எரிவாயுக் குழாய்களில் எவ்வாறு கசிவு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை ஸ்வீடன் நடத்தியிருந்த நிலையில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் குழாய்கள் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்இ இந்த எரிவாயுக் குழாய்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. பால்டிக் கடலின் பொர்ஹொலம் தீவுப் பகுதியில் கடலுக்கடியில் சிறிய நில அதிர்வு உணரப்பட்டதாக ஸ்வீடன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அதிர்வு எரிவாயுக் குழாய்களில் ஏற்பட்ட வெடிப்பினால் நிகழ்ந்ததென பின்னர் தெரியவந்துள்ளது. 26-ம் திகதி நள்ளிரவு 12 மணி யளவில் எரிவாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்த நேரத்தில் அவ்விடத்தினருகே அமெரிக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான பி-8 ஏ என்ற உளவு விமானம் அந்த பகுதியினருகே சுமார் 15 மைல் தொலைவில் பறந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரஷியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடலுக்கு அடியில் குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் எரிவாயுக் குழாய் தொகுப்பின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்த தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என திசை திருப்ப முயற்சித்ததா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இதேவேளைஇ நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கசிவுக்கும் உளவு விமான பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றும் பால்டிக் கடலில் வழக்கமான உளவுப் பணிகளையே பி-8ஏ உளவு விமானம் கண்காணித்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் வெடி விபத்து நடந்த பகுதிக்கருகே அமெரிக்க விமானப்படை விமானம் உளவுப்பணியில் ஈடுபட்ட சம்பவமhனது ஐரோப்பிய நாடுகளிடையே சந்தேகத்தையும்இ பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Home வெளிநாட்டு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகக் குழாய்களில் கசிவு: பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என சந்தேகம்!