எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்த கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், நேர்முகதேர்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.