10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். ரி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.ஏற்கனவே வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு ஆகியவை நிறைவடைந்துள்ளன.இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறுகிறது.1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்கள் இறுதியாக ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு தொடங்குகிறது.ஐ.பி.எல். ஏலத்தில் வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் கையிருப்பு வைத்துள்ள தொகை விவரம் பின்வருமாறு காணப்படுகின்றது.
சென்னை – ரூ. 55 கோடி, டெல்லி – ரூ. 73 கோடி, குஜராத் – ரூ. 69 கோடி, கொல்கத்தா – ரூ 51 கோடி, லக்னோ – ரூ. 69 கோடி, மும்பை – ரூ. 45 கோடி, பஞ்சாப் – ரூ. 110.5 கோடி, ராஜஸ்தான் – ரூ. 41 கோடி, பெங்களூர் – ரூ. 83 கோடி, ஐதராபாத் – ரூ. 45 கோடி