ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அகமதாபாத் மைதானத்தில் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஓட்டங்கள் (243 ஓட்டங்கள்) இதுவாகும். இதற்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 234 ஓட்டங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள பஞ்சாப் கிங்ஸ் புதிய வரலாறு படைத்துள்ளது.