இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய தொடருந்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் கிடைக்க உள்ளதாகவும் இந்திய மத்திய தொடருந்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.