ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
நுவரெலியா தபால் நிலையம் அமைந்துள்ள கட்டடத்தை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல், 48 மணித்தியாலங்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.