ஒப்பந்த நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் திடீர் நெருக்கடி

0
19

அமெரிக்காவில் அரச பணிகளுக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கடி அளித்து வருகிறது.

General Dynamics, Deloitte, Accenture, Booz Allen, Guidehouse உள்ளிட்ட நிறுவனங்கள் தொழில்நுட்பம், ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட தொழில்முறை சேவைகளை ஒப்பந்தம் அடிப்படையில் அரசுக்கு வழங்கி வருகின்றன.

அமெரிக்க அரசாங்கத்தின் செலவு குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் ட்ரம்ப் நிர்வாகம் 1,700 நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளை இந்த வார தொடக்கத்தில் இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ள  10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை இம்மாத இறுதிக்குள் குறைக்க வேண்டும் என ட்ரம்ப் அரசு பொதுச் சேவைகள் துறைக்கு  உத்தரவிட்டுள்ளது.

 இதேவேளை இவர்கள் அரசுக்கு வழங்கும் சேவைகள் ஆலோசனைகள் என்ன?, அவ்வற்றிற்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கான விளக்கம் மற்றும் கட்டணங்களைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.