அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல தொலைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.