ஒரு வயது குழந்தையையும் மூன்று சிறுவர்களையும் காணவில்லை

0
178
Vector illustration of the word Missing in red ink stamps

காலி – நெலுவ – தெல்லவ, மியனவத்துர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழந்தை மற்றும் மூன்று சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வயது குழந்தை , 10 வயது சிறுவன் ஒருவர் 13 வயதுடைய சிறுவர்கள் இருவர் என நால்வர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மியன்வத்துர தோட்டத்தில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்றிரவு முதல் சிறுவர்களை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

காணாமல்போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போயுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.