ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

0
880

மாலியைச் சேர்ந்த ஹலீமா சிசி என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன.
அந்தப் பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மொராக்கோவிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை பிறந்தன. குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுக்கும் மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே ஒரே பிரசவத்தில் தலா 9 குழந்தைகள் பிறந்தன. எனினும், அந்தக் குழந்தைகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது