உலகின் மிக வயதான நபரான 118 வயதுடைய ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி கொவிட்-19 அச்சங்கள் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கெடுப்பதை தவிர்த்துள்ளதாக அவரது மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை பெற்ற கேன் தனகா, மே 11 ஆம் திகதி புகுயோகாவில் தொடங்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்குகொள்ளும் ஒருவராக நியமிக்கப்பாட்டார்.
எனினும் தற்சமயம் நிலவும் கொவிட்-19 அச்சம் காரணமாக அவரது குடும்பத்தாரின் ஆலோசனைக்கு அமைவாக கேன் தனகா ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கொள்ளாமல் விலகவுள்ளதாக மருத்துவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.