ஒலிம்பிக் பதக்கத்துடன் சென்ற வீரர்கள் மீது வட கொரியா நடவடிக்கை

0
54

பாரிஸில் நடைபெற்ற 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின் போது பதக்கத்தை வென்ற வட கொரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்ததால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேசைப்பந்து போட்டியின் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

வெற்றியி;ன் பின்னர் இருவரும் தென்கொரிய வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். போட்டிக்கு முன்னதாகவே வட கொரிய
வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வடகொரியாவிற்கு சென்ற வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.