ஒளிரும் நட்சத்திரத்தின் ஆறு புள்ளிகளைக் கொண்ட ஒளிப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.
இந்த பரந்த அண்டத்தில் ‘NGC 7469’ விண்மீன் திரளின் மைய பகுதியில், அதாவது அதன் இதயப் பகுதியில் உள்ள நட்சத்திரத்தின் ஒளிரும் ஒளிப்படத்தைத்தான் தற்போது ஜேம்ஸ் வெப் பதிவு செய்து அனுப்புயுள்ளது.
இந்தப் படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், “விண்மீன் செயல்பாட்டில் உள்ள விண்மீன் கருவை கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான மத்திய பகுதி. இது மையத்தில் விழும்போது தூசு மற்றும் வாயுவால் வெளிப்படும் ஒளி பிரகாசமாக மின்னுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.