ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பிரதேசங்களை பரிமாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.