வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி 07 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகரவிற்குகு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேராவின் உத்தரவில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, மரங்களை ஏற்றிச்சென்ற பிக்கப் ரக வாகனம் பொலிஸாரை மோதித் தள்ளும் வகையில் செயற்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து பொலிசார் குறித்த வாகனத்தை நோக்கி 05 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது வாகனத்தை கைவிட்டு, மரங்களை கடத்திச் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதில் இருந்து சுமார் 07 இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.