சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாகவும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில் அந்த படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று, படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியுள்ளதாகவும் அதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.