கச்சதீவு ஆலய திருவிழாவுக்கு நன்கொடை கோரும் அரசு

0
179

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்களை ஆதரவளிக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும் தேவாலய திருவிழாக்களில் மொத்தம் 9 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தடவை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 8,000 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், யாத்திரிகர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகளை அவர்களே செய்ய வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள புரவலர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு நன்கொடை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.