கச்சதீவு உற்சவத்தில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொள்வது தொடர்பில், சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டே முடிவுகள்
எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்; இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தின் தொற்று நிலைமைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.