கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

0
133

மொனராகலை கோணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், மூன்று கஜமுத்துக்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரை பொலிஸார் நேற்று முன்தினம் (25) கைதுசெய்துள்ளனர்.

கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.