கொரோனா தொற்றுக் காரணமாக, நாட்டில், மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மேலும் 195 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 68 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம், அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு வார காலப் பகுதியில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 7 நாட்களில், ஆயிரத்து 197 பேர், கொவிட் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.