எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு கடற்தொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளீர்த்து அதற்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்ற உறுதியை வழங்க வேண்டும் என வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையமும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.