கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்!

0
2

கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.

இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.