கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 8ஆவது மைல்கல் பிரதேசத்தில் நேற்று மீட்கப்பட்ட நிர்வாண சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரியா பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கி கொலை செய்யப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் மூலம் குறித்த பகுதியில் அவரின் சடலம் கைவிட்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரால் பொறுப்பேற்றுள்ளனர்.
36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள், வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்