31 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கடைசி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கவுள்ள சம்பளம்..

திரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கியுள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை கமிட் செய்துவைத்துள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேரமாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் கூறியதன்படி, அவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் Greatest Off All Time. மற்றொரு திரைப்படம் தான் தளபதி 69. இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் தளபதி 69 படத்தை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என்கின்றனர். அதே போல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்ராஜ், அட்லீ போன்றவர்களின் பெயரும் அடிபடுகிறது.இன்னும் சில மாதங்களில் தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 69 படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறாராம்.தற்போது நடித்து வரும் Greatest Off All Time படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளமாக வாங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியகியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles