கட்டாய மரணதண்டனையை இரத்து செய்த மலேசியா

0
145

கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கட்டாய மரணதண்டனையை இரத்து செய்ய மலேசிய அரசு தீர்மானித்துள்ளது.
மலேசியாவில் கொலைக்குற்றம், போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத செயல்கள், ஆட்கடத்தல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு கட்டாய மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த கட்டாய மரணதண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதனை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படி, மரணதண்டனையை இரத்து செய்ய அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.