கணவரால் தீ வைத்து எரியூட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியான மனைவி உயிரிழப்பு!

0
240

காலி, கோனாபினுவல பிரதேசத்தில் கணவரால் தீ வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியான மனைவி உயிரிழந்துள்ளார்.
பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோனாபினுவல பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்டாக பணியாற்றிவந்த 35 வயதான குறித்த பெண், பணி முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவரால் எரியூட்டப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான சந்தேகநபரான கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.