கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் மூவர் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (23) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைச் செய்த துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் துப்பாக்கியை வழங்கிய மற்றைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர்.சாட்சியங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்கு காவல்துறைக்கு அனுமதியளித்துள்ளார்.