கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – துப்பாக்கிதாரியின் ஆடை கண்டுபிடிப்பு

0
10

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அணிந்திருந்த உடையை காவல்துறை விசேட அதிரடிப்படை கண்டுபிடித்துள்ளது.நீர்கொழும்பு,கொச்சிக்கடை ரிதிவேலி வீதியில் இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களை தொடர்ந்தே இந்த ஆடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை நீதிமன்றில் அறிவித்துள்ளதுகொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் பணிப்புரையின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.உடலை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.