





கண்டி – தெல்தெனிய மகாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா, வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. விழாவில் பிரதம அதிதிகளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பெரியதம்பி விக்னேஸ்வரன், தெல்தெனியா வலயக் கல்வி பணிப்பாளர் குமாரிஹாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி, இக்கல்லூரியின் இந் நூற்றாண்டு விழாவானது எம் மலையக இனத்தின் கல்விக்கான ஒரு அங்கீகாரம் என தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் இப் பாடசாலையில் சேவையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்கள் பல்கலைக்கழகம், கலாசாலைகளுக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.