கதையின் நாயகனாக அறிமுகமாகும் மொடலிங் கலைஞர் தமிழ்வாணன்

0
98

மொடலிங் துறையின் பிரபலமான கலைஞர் தமிழ்வாணன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் தாஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் தமிழ்வாணன், சாய் பிரியா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.

விஜய் எஸ். குமரன் ஒலிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை டாம்’ஸ் கன்சல்டன்சி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதனை புரிந்து கொண்ட ஒருவன்-  வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான்? என்பதை மையப்படுத்தி  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.