கந்தளாயில் வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் பலி!

0
338

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த முகம்மட் நஜீப் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நகரிலிருந்து வீட்டுக்குச் துவிச்சக்கர வண்யில் சென்ற ஒருவரே வீதியியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்தியவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.