கந்தானையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தானை பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.