கனடா காரைதீவு மக்கள் ஒன்றியம் மருந்து பொருட்கள் மற்றும் போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரம் என்பவற்றை, வைத்திய கலாநிதி டொக்டர் அ.வரதராசாவின் ஒழுங்கமைப்பில்
காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்களையும் 3 லட்ச ரூபாய் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரத்தையும் கையளிக்கும் நிகழ்வு,
இன்று காரைதீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் உபசெயலாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.
கனடாவில் வாழும் தமது பிள்ளைகளின் சார்பாக ஓய்வு நிலை அதிபர்களான வெ. ஜெயநாதன், பொன் சிவானந்தன் ஆகியோர் அன்பளிப்புப் பொருட்களை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் நடராஜா
அருந்திரனிடம் வழங்கி வைத்தனர்.
இதற்கு இணைப்பாளராக செயற்பட்ட சமூக சேவையாளர் எம். புண்ணியநாதனும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
Home கிழக்கு செய்திகள் கனடா கரைதீவு மக்கள் ஒன்றியத்தால், காரைதீவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு